வட மாநிலங்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

By SG Balan  |  First Published Sep 27, 2023, 10:11 AM IST

இந்தியா - கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.


தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நாடு முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கு இடமான நபர்களின் இடங்களில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த சோதனைகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Latest Videos

undefined

ஆறு மாநிலங்களில் 3 வழக்குகளில் லாரன்ஸ், பாம்பிஹா, அர்ஷ் டல்லா ஆகிய காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய 51 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனைகளை நடத்தி வருகிறது.

பிரபலம் ஆவதற்காக கட்டுக்கதையை ஜோடித்த கேரள ராணுவ வீரர் கைது!

பஞ்சாபில் 30 இடங்களும், ராஜஸ்தானில் 13 இடங்களும், ஹரியானாவில் 4 இடங்களும், உத்தரகண்டில் 2 இடங்களும், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒரு இடமும் சோதனை வளையத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது.

உதம் சிங் நகர் பாஜ்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது. வீட்டில் உள்ள ஆயுதங்களை என்ஐஏ குழு சோதனை செய்து வருவதாக உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கிளமென்டவுன் காவல் நிலைய பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குழு சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் மற்றும் ராஜியசர் ஆகிய இடங்களில் என்ஐஏ குழு சோதனை நடத்தி வருகிறது. சூரத்கரில் மாணவர் தலைவர் ஒருவரின் வீட்டில் சோதனை நடக்கிறது. இதுவரை இந்த விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கனடாவுடன் தொடர்பு வைத்திருக்கும் 43 நபர்களின் விவரங்களையும் வெளியிட்டது. மேலும், அவர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களின் சொத்து விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு வலது கை அகற்றம்! ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை!

click me!