கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி அந்த ராணுவ வீரர் பேமஸ் ஆவதற்கு ஆசைப்பட்டு பரப்பிய கட்டுக்கதை என்று தெரியவந்துள்ளது.
6 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்த ராணுவ வீரர் ஒருவர், தனது முதுகில் PFI என்று எழுதிக்கொண்டு, பொய்யான வாக்குமூலம் அளித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த ராணுவ வீரரும் அவருக்கு உதவிய நண்பரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயதான ஷைன் குமார் தான் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டது.
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! ராணுவ வீரரைத் தாக்கி முதுகில் PFI என எழுதிய மர்ம கும்பல்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஷைன் குமார் தான் பிரபலமாக விரும்பி பொய் வழக்கைப் புனைந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். இந்த நாடகத்தில் குமாருக்கு உதவிய அவரது நண்பர் ஜோஷி தாங்கள் பொய்யான புகாரை அளித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து குமார், ஜோஷி ஆகிய இருவரையும் கடக்கால் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். சம்பவத்தை ஜோடிக்க பயன்படுத்தப்பட்ட பச்சை பெயிண்ட், பிரஷ் ஆகியவற்றை ஜோஷியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
குமார் அளித்த புகாரில், ஞாயிறு இரவு கடக்கால் காவல் எல்லைக்குட்பட்ட சனாபாரா கிராமத்தில் தான் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, தன்னை வழிமறித்த சிலர் ஒருவர் போதையில் விழுந்து கிடப்பதாகவும், உதவி தேவைப்படுவதாகவும் சொல்லி அழைத்துச் சென்று தாக்கினர் எனக் கூறியிருந்தார். அவர்களுடன் சென்றதும் ஆறு பேர் சேர்ந்து தன்னைத் தாக்கி, தன் சட்டையைக் கிழித்து முதுகில் "PFI" என்று எழுதிவிட்டனர் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் பதிவு செய்யப்பட்ட மறுதினமே இது ஜோடிக்கப்பட்ட சம்பவம் என்று தெரியவந்துள்ளது.
PFI என்பது கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
10ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை; கிணற்றில் வீசப்பட்ட உடல் மீட்பு