நாட்டின் 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) இன்று நடத்திவரும் சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது
நாட்டின் 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) இன்று நடத்திவரும் சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது
இவர்களிடம் என்ஐஏ அமைப்பினர் நடத்தும் விசாரணைக்குப்பின் முறைப்படியான கைது நடவடிக்கை இருக்கும் என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா கோபம்! ராஜஸ்தானில் காய்நகர்த்தும் கெலாட்! காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு குறைகிறது
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், ஜலானா, பரிபானி மாவட்டங்கள், கர்நாடகாவில் உள்ள சிமோகா, பிதார், பெல்லாரி, ஹூப்பள்ளி, கலாபுர்கி, அசாமில் நாகர்பேரா, உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியான புலந்த்சாஹர், சரவுர்பூர், லிசாரிகேட், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் நிஜாமுதீன், ஷாகீன்பாக்,ரோஹினி, ஜாமியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த ரெய்டில் டெல்லியில் இதுவரை 30 பேர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் அம்பானிக்கு நவம்.17 வரை கெடு! வருமானவரி துறை நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை
இதுவரை யார்மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை நடந்துவருகிறது, விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
அசாம் மாநிலத்தில் என்ஐஏ அதிகாரிகள், கோல்பாரா, பேர்பேட்டா,பாக்ஸா, தாரங், உடல்குரி, கரிம்கஞ்ச் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 25 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
குஜராத் மாநிலத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் இணைந்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் பிஎப்ஐ அமைப்புடன் தொடர்புடைய, அந்த அமைப்பில் உள்ள 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் அமைப்பான எஸ்டிபிஐ கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அகமதாபாத்தில் கட்சி அலுவலகம் திறந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இதுவரை பிஎப்ஐ அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், யாரும் முறைப்படி கைது செய்யப்படவில்லை.
கர்நாடக மாநிலத்தில் சிமோகா, பெல்லாரி, ஹூப்பள்ளி, கலாபுர்கி ஆகியஇடங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சிமோகாவில் 5 பேர், பெல்லாரியில் 4பேர், ஹூப்பள்ளியில் 2 பேர், கோலார் மாவட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒருவருக்கும் முறைப்படி கைது வாரண்ட் வழங்கப்படவில்லை. விசாரணைக்குப்பின்புதான் முறைப்படி கைது நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது