sachin pilot gehlot: சோனியா கோபம்! ராஜஸ்தானில் காய்நகர்த்தும் கெலாட்! காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு குறைகிறது

By Pothy RajFirst Published Sep 27, 2022, 11:28 AM IST
Highlights

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செய்யும் அரசியல், அங்கு நிலவும் சூழலால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையடுத்து, அறிக்கை அளி்க்கக் கோரி மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகானுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செய்யும் அரசியல், அங்கு நிலவும் சூழலால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையடுத்து, அறிக்கை அளி்க்கக் கோரி மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகானுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு பின்புலத்தில் முதல்வர் அசோக் கெலாட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து, அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு குறைந்து வருகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்

ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. இதனால் அடுத்த முதல்வராக துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட் வருவார் எனக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90க்கும் மேற்பட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முன்தினம் சபாநாயகரைச் சந்தித்து தாங்கள் ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தனர். 

தனது ஆதரவு எம்எல்ஏக்களை கட்டுப்படுத்துவது என் கையில் இல்லை என்று அசோக் கெலாட் கூறியது வியப்பாக இருந்தது. ஆனால் அசோக் ஆதரவு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் மேலிடம் கைகாட்டுபவர் முதல்வராக முடியாது, நாங்கள் தேர்ந்தெடுக்கும் நபரே முதல்வராக முடியும் என்று தெரிவித்தனர். 


இதையடுத்து, ராஜஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அறிய மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான் இருவரையும் தலைவர் சோனியா காந்தி அனுப்பினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அசேக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும், மேலிடப் பார்வையாளர்களான கார்கே, மகான் முன்நிலையில் வரவில்லை. மாறாக, அமைச்சர் சாந்தி தாரிவால், காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி தலைமையில் தனியாகக்கூட்டம் நடத்தினர். 

டெல்லியில்12 வயது சிறுவன் பலாத்காரம், உறுப்புகள் சிதைப்பு:குழந்தைகளைக காக்க டிப்ஸ்
இதனால் அதிருப்தி அடைந்த மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடந்து கொண்டதும், அவர்கள் தனியாகக் கூட்டம் நடத்தியதும் ஒழுக்கக்கேடான செயல் என்று தெரிவித்து டெல்லி புறப்பட்டனர்.

இதையடுத்து, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஆனால், இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 


ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடந்து கொண்டு விதத்தைக் கேள்விப்பட்ட தலைவர் சோனியா காந்தி மிகுந்த கோபத்திலும் அதிருப்தியும் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசோக் கெலாட்டின் அரசியல் கேம்! ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எம்எல்ஏக்கள் போர்க்கொடி

 


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, சோனியா காந்திக்குப்பின் அசோக் கெல்ட் வருவார் என்று பேசப்பட்ட நிலையில், அசோக் கெலாட் தலைவர்  பதவிக்குவருவதற்கான வாய்பபுகள் குறைந்துள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடந்துகொண்ட விதத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது என்று மேலிடப் பார்வையாளர்களிடம் கெலாட் தெரிவித்தது சோனியா காந்தியை அதிருப்தி அடையவைத்துள்ளது.


இதனால் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவர் போட்டியிடாத நிலையில், அவருக்கு அடுத்தார்போல், மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், சுஷில் குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா ஆகியோர் பெயரும் பரீசீலிக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையை மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகானிடம் சோனியா காந்தி கேட்டுள்ளார். இருவரும் தங்கள் அறிக்கையை சோனியா காந்தியிடம் நாளை அளிப்பார்கள் எனத் தெரிகிறது. 


காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் விரைவில் கூட்டம் நடத்தி தங்களின்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது. 

click me!