தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள்: மத்திய அரசு பரிந்துரை!

By Manikanda Prabu  |  First Published Jul 16, 2023, 11:38 AM IST

தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள் நடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது


சாலைகளை அமைப்பதற்கு இயந்திரங்கள் மற்றும் மனிதவளம் திரட்டப்பட்டவுடன் நெடுஞ்சாலைகளில் உள்நாட்டு தாவரங்கள் நடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பரிந்துரைத்துள்ளது. மூங்கில் போன்று மெதுவாக மறைந்து வரும் மஹுவா, பேல் (மர ஆப்பிள்) மற்றும் குலர் போன்ற உள்நாட்டு தாவர இனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரும்புவதாக தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கூற்றுப்படி, சாலை திட்டப் பணிகள் முடிந்த பிறகு தாவரங்கள் நடும் பணி தொடங்கும் எனவும், இந்த பணியை முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிகிறது. எனவே, சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் ஆரம்ப கட்டத்தில் தாவரங்கள் நடும் பணியை தொடங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

“நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்குள், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் உள்ள மார்க்கத்தில் சில மரங்கள் வளரும் வகையில், கவனத்துடனும், துல்லியமான திட்டமிடலுடனும் தோட்டங்களின் செயல்முறையை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்காக, ஆரம்ப கட்டத்தில் தாவரங்கள் நடும் பணியை தொடங்கலாம். நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, மழைக்காலத்தில் குறைந்தபட்சம் கடைசி பருவத்தில் தாவரங்கள் நட திட்டமிடலாம்.” என தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தோட்டங்களை அடர்த்திப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நிலையான இயக்க செயல்முறையின்படி, மூன்று வரிசைகளாக தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வரிசைகளுக்கும் இடையே மூன்று மீட்டர் தூரம் இருக்க வேண்டும். முதல் வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளியும் மூன்று மீட்டர் இருக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் உள்ள தாவரங்களுக்கு இடையிலான தூரம் முறையே ஆறு மீட்டர் மற்றும் 8-12 மீட்டர் இருக்க வேண்டும்.

விருப்பத்திற்கு மாற்றாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

புதிய வழிகாட்டுதல்களின்படி, எதிர்கால தோட்ட அமைப்பு முறைகளில் வரிசையைப் பொருட்படுத்தாமல் தாவரங்களுக்கு இடையிலான இடைவெளி மூன்று மீட்டராக இருக்கும் என தெரிகிறது. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மூங்கில்களை நடுவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நெடுஞ்சாலைகளில் மூங்கில்களை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

click me!