பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் .. என்ன காரணம் தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Sep 24, 2022, 5:18 PM IST
Highlights

தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.
 

தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி ஏகே கோயல் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது. அதில் காலம் தாமதம் செய்யாமல் சுகாதார பிரச்சனைகள் நேரிடுவதற்கு முன்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் மாசுப்பாட்டை கட்டுப்படுத்த விரிவான திட்டத்தினை வைத்திருக்க வேண்டியது ஒரு அரசின் கடமை மற்றும் முழு பொறுப்பாகும் என்பது புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் சாடியுள்ளது.

மேலும் படிக்க:பண்டிகை காலங்களில் 3 ல் ஒரு குடும்பம் ரூ.10,000 மேல் செலவழிப்பு.. ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்..

நிதி பற்றாக்குறை இருப்பின், அரசு குறைவான செலவில் அல்லது வளங்கள் அதிகரிப்பு மூலம் பொருத்தமான திட்டமிடலை வகுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அமர்வு கூறியுள்ளது. கழிவு மேலாண்மையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளின் புகார்களில் முன்னூரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக திட மற்றும் திரவக்கழிவுகள் சுத்தரிப்பு விஷயத்தில் அரசின் தோல்வியை சுட்டிக்காட்டி தேசிய பசுமை தீர்ப்பாயாம் ரூ. 2,180கோடி அபராதம் விதித்தது. அதில் சுமார் ரூ.100 கோடியை அரசு தீர்ப்பாயத்திற்கு செலுத்தியுள்ளது.மீதமுள்ள ரூ.2,080 கோடியை இன்னும் இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

தேசிய பசுமை தீர்ப்பாயமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து கண்காணித்து வருகிறது. 

மேலும் படிக்க:link aadhaar to driving license: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள்

click me!