aiims in madurai :மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 'ஆப்ரேஷனே' நடக்குதுனுகூட சொல்லுங்க? ப.சிதம்பரம் கிண்டல்

By Pothy Raj  |  First Published Sep 24, 2022, 5:11 PM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தினசரி 1000 புறநோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள், அறுவை சிகிச்சை நடக்கிறது என்று கூட பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சொல்லியிருக்கலாமே என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தினசரி 1000 புறநோயாளிகள் கவனிக்கப்படுகிறார்கள், அறுவை சிகிச்சை நடக்கிறது என்று கூட பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சொல்லியிருக்கலாமே என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு

Tap to resize

Latest Videos

தமிழகத்துக்கு 2 நாட்கள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வந்திருந்தார். மதுரையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசுகையில் “ மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், தொற்றுநோய் பிரிவுக்காக கூடுதலாக ரூ.164 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் 750 படுக்கை வசதிகளுடனும், 250 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் அமைய இருப்பதாக நட்டா குறிப்பிட்டார்.

5ஜி சேவை அக்டோபர் 1ம் தேதி அறிமுகம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ஜே.பி.நட்டா பேச்சால் அதிர்ச்சி அடைந்த மதுரை எம்.பி. வெங்கடேஷன், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து, 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேள்வி எழுப்பினர்.

அமுல்யாவை சந்தித்தாரா ராகுல் காந்தி? பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு சிக்கியவர்: உண்மை என்ன?

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், தன்னுடைய பங்கிற்கு ஜே.பி.நட்டாவை கிண்டல் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், “மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

 

மதுரை ஏய்ம்ஸ் (AIIMS)
மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?

பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

— P. Chidambaram (@PChidambaram_IN)

பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

click me!