காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, சமூக செயற்பாட்டாளர் அமுல்யா லியோனாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வரும்நிலையில் அது குறித்த உண்மையை இந்த செய்தி ஆய்வு செய்கிறது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, சமூக செயற்பாட்டாளர் அமுல்யா லியோனாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வரும்நிலையில் அது குறித்த உண்மையை இந்த செய்தி ஆய்வு செய்கிறது
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பட்டாளர் அமுல்யா லியோனா நரோன்ஹா. இவரை ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது சந்தித்துப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
குறிப்பிட்ட தலைவர்களுக்கு குறி! இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க பிஎப்ஐ முயற்சி: என்ஐஏ அறிக்கை
லியோனாவை தனது தோளில் சாயவைத்து ராகுல் காந்தி நடந்து வருவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு விமர்சித்தனர்.
இந்தியாவுக்கு எதிராக மனநிலை கொண்ட ஒருவரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வாட்ஸ்அப், ட்விட்டரில் ராகுல் காந்தி, லியோனா போன்ற புகைப்படம் வைரலாகி பரவியது.
கேரள கடைக்காரரின் துணிச்சல் ! பிஎப்ஐ அமைப்பு ஹர்தாலுக்கு எதிராக கடையைத் திறந்து வியாபாரம்
இந்து மதத்தைப் பற்றியும், பாரத மாதா குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்த கிறிஸ்தவ பாதிரியாரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார் என்று ஏற்கெனவே ஒரு சர்ச்சை கிளம்பிஇருந்தது. அதோடு இந்த சர்ச்சையும் சேர்ந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
இதில் சமூக செயற்பட்டாளர் அமுல்யா லியோனா குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். 2020ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அப்போது, 2020ம்ஆண்டு, பிப்ரவரி 20ம் தேதி பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி பங்கேற்ற கூட்டத்தில் அமுல்யாவும் பங்கேற்றார். அப்போது அமுல்யா குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிக் கொண்டிருந்தநிலையில் திடீரென பாகிஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்டார்.
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு
இதையடுத்து, மேடையில் இருந்த நிர்வாகிகள், ஒவைசிஆகியோர் அமுல்யா கையில் இருந்த மைக்கை பிடுங்கி, அவரை எச்சரித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமுல்யா மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அமுல்யாவின் தந்தை வஜி நுரன்ஹா கூறுகையில் “ நான் அமுல்யாவிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்தேன். அவர் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும்” எனத் தெரிவித்தார். அமுல்யா குறித்து விசாரணை நடத்தியதில் தேசவிரோத நோக்குடன் செயல்படும் அமைப்புகளோடு சேர்ந்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அமுல்யாவுடன் ராகுல் காந்தி சேர்ந்து நடந்தது தொடர்பாக உலாவரும் புகைப்படம் குறித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ராகுல் காந்தியுடன் வரும் பெண் அமுல்யா அல்ல, அவரைப் போன்று இருக்கும், மிவா ஆன்ட்ரிலியோ என்பது தெரியவந்தது.
ராகுல் காந்தி நடைபயணத்தில் அவரைச் சந்தித்துப் பேசியது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று கடந்த இரு நாட்களுக்கு முன் மிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆதலால் அமுல்யாவை ராகுல் காந்தி சந்திக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இதில் மிவா ஆன்ட்ரிலியோ கேரள மாணவர் யூனியன்(கேஎஸ்யு)தலைவராக உள்ளார். மாநில காங்கிரஸின் மாணவர் அமைப்புதான் கேஎஸ்யு.