
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) 100 நாட்களுக்குள் 'உக்ரம்' என்ற ரைஃபிள் வகை துப்பாக்கியை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர்.
டிஆர்டிஓ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் ஒரு பிரிவான ஆர்மமென்ட் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் (ARDE) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான டிவிபா ஆர்மர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து 'உக்ரம்' துப்பாக்கியை உருவாக்கி இருக்கின்றன.
இந்தத் துப்பாக்கி 7.62 மிமீ அளவுள்ள சுற்றுகளை பயன்படுத்துகிறது. இது 5.62 மிமீ காலிபர் ரவுண்டுகளை பயன்படுத்தும் ரைஃபிள்களை விட சக்திவாய்ந்தது. இது INSAS துப்பாக்கி போன்றது. இது இந்தியாவில் துணை ராணுவப் படைகள் உட்பட ஆயுதப் படைகளால் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நான்கு கிலோ எடை கொண்ட இந்த் துப்பாக்கி 500 மீட்டர் அல்லது தோராயமாக ஐந்து கால்பந்து மைதானங்கள் அளவுக்கு வரம்பைக் கொண்டிருக்கும். ரைஃபிளில் 20 ரவுண்டுகள் உள்ளன. தானியங்கி மற்றும் சிங்கிள் முறைகளில் சுடும் வசதியும் இருக்கிறது.
2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!
ராணுவத்தின் பொதுப் பணியாளர் தரத் தேவைகளின் (GSQR) படி, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகளின் செயல்பாட்டுத் தேவைகளை மனதில் கொண்டு 'உக்ரம்' துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. GQSR என்பது மூலதன கொள்முதலில் ஆரம்ப செயல்முறைகளில் ஒன்றாகும். இது உபகரணங்கள் ஏன் தேவைப்படுகின்றன, அதன் பயன்பாட்டு விவரங்கள், பராமரிப்பு மற்றும் தரத் தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
"இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திட்டம். ARDE துப்பாக்கியை வடிவமைத்த பிறகு, மேம்பாடு மற்றும் உற்பத்திக்காக ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தை நாடினோம்" என்று ARDE இயக்குனர் அங்கத்தி ராஜு சொல்கிறார்.
இந்த ரைபிள் 100 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர்காலம், கடுமையான வெப்பம் மற்றும் நீருக்கடியில் இதன் செயல்பாட்டு திறன் சோதிக்கப்படும்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அறிமுகமான, இன்னும் பயன்பாட்டில் உள்ள பழைய INSAS துப்பாக்கியை மாற்றுவதற்காக இந்த உக்ரம் துப்பாக்கி கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் பலன்கள்! விரைவில் வரும் சூப்பர் அறிவிப்பு!