
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் நரேந்திர மோடியால், இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படும் என, அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், மே மாதம் கடைசி வாரத்தில் திறந்து வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மே 26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது.
மேடை முன் குழந்தையைத் தூக்கி வீசிய தந்தை! முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பரபரப்பு
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள ஊழியர்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவார்கள். புதிய கட்டமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகின்றன. மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.
2020 டிசம்பரில் பிரதமர் மோடியால் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிறப்பு தொடர்பு பிரச்சாரத்தை பாஜக திட்டமிட்டுள்ளது.
மே 30ஆம் தேதி பிரமாண்ட பேரணியுடன் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த நாள் மே 31ஆம் தேதி பிரதமரின் இரண்டாவது பேரணி நடைபெறும். நாடு முழுவதும் பாஜக மூத்த தலைவர்களின் 51 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 396 மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
இந்த பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பாஜகவின் முதல்வர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
பலத்த காற்று.. டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்.. பார்வை திறனும் குறைந்ததால் அதிர்ச்சி