இனி உங்கள் மாநில நம்பர் பிளேட் தேவையில்லை..வந்துவிட்டது புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்!

By vinoth kumar  |  First Published Oct 6, 2022, 9:39 AM IST

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 


நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி  சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த நம்பர் பிளேட்டை அறிமுகம் செய்ய முக்கிய காரணம் வேறு மாநிலங்களுக்கு நாம் குடிபெயர்ந்தால் அந்த மாநில வாகன பதிவு எண்ணுக்கு மாற்றவேண்டிய சிரமம் ஏற்படாது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் பயங்கர மோதல்.. 9 பேர் உடல் நசுங்கி பலி! 40 பேர் படுகாயம்.!

உதாரணமாக நாம் நம்முடைய TN என்று பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலங்களில் 12 மாதங்கள் மட்டுமே ஓட்டமுடியும். அதன் பிறகு நாம் அங்கு இருந்தால் அந்த மாநில பதிவு எண்ணுக்கு வாகனத்தை மீண்டும் மாற்றவேண்டும். தற்போது இந்த BH காணப்படும் பாரத் சீரிஸ் காரை வைத்திருந்தால் நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்திய முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். 

சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனை சாவடிகளிலும் நிறுத்தப்படமாட்டாது. இந்த புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பர்மிட்டுகள் மற்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க;-  உத்தராகண்ட்டில் திருமணத்திற்கு சென்று திரும்பியபோது... பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் பரிதாப பலி

click me!