மால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு... 7 பேர் பலி... துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது நேர்ந்த சோகம்!!

By Narendran SFirst Published Oct 5, 2022, 11:24 PM IST
Highlights

மேற்கு வங்கம் அருகே துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது மால் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கம் அருகே துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது மால் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பாய்குரி அருகே மால்பஜார் என்ற பகுதியில் துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிலைகளை எடுத்துச் சென்ற 3 பக்தர்கள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுத்தை குட்டிகளுக்கு பெயர்வைத்து உணவளித்தார் முதல்வர் யோகி… இணையத்தில் வீடியோ வைரல்!!

இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் மல்பஜாரில் துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அவர் தனது பேரக் குழந்தையுடன் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அவர், தனது பேரக்குழைந்தையை பாதுகாப்பான இடத்தில் தூக்கி எறிந்துவிட்டு அவர் நீரில் மூழ்கி உயிரிந்தார்.

இதையும் படிங்க: சீனாவின் இலக்காகும் லடாக்... போரிட தயாராகும் உள்நாட்டு ஹெலிகாப்டர்கள்!!

அந்த பகுதியில் நேற்று முதல் மோசமான வானிலை நிலவி வந்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!