அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் பயங்கர மோதல்.. 9 பேர் உடல் நசுங்கி பலி! 40 பேர் படுகாயம்.!

Published : Oct 06, 2022, 08:03 AM ISTUpdated : Oct 06, 2022, 10:35 AM IST
அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் பயங்கர மோதல்.. 9 பேர் உடல் நசுங்கி பலி! 40 பேர் படுகாயம்.!

சுருக்கம்

கேரளாவில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கேரளாவில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக  பயங்கரமாக மோதியது.

இதையும் படிங்க;- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தல்… கலிபோர்னியாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க;-  போலீசார் தடுத்து நிறுத்தியதால் பைக்கை கொளுத்திய நபர்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
AI என்றாலே இந்தியாதான்.. மைக்ரோசாப்ட் மிகப்பெரிய ஆசிய முதலீடு.. ரூ.1.5 லட்சம் கோடி!