
நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும் என்றபோதிலும், பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த காலை உணவாக தோசையைத் தான் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு ஆர்டர் செய்யும் ‘ஸ்விஜ்ஜி’ என்ற நிறுவனம் இந்தியர்களுக்கு பிடித்த காலை உணவு குறித்து முக்கிய மெட்ரோ நகரங்களான சென்னை, பெங்களூரு,புனே, மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 நகரங்களில் ஆய்வு நடத்தியது. ஏறக்குறைய 12 ஆயிரம் ரெஸ்டாரன்ட்களில் காலை நேரத்தில் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின் வீடுகளில் பாரம்பரிய காலை உணவாக போகா(அவல்), பரோட்டாவும் எனத் தெரியவந்துள்ளது.
ஆய்வின் அடிப்படையில், டெல்லி மக்கள் காலை நேர உணவாக சோலா பத்துர்(பூரி), பரோட்டா மற்றும் தோசையை விரும்பி சாப்பிடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
மும்பை மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெண்ணையும், ரொட்டி(பன்), மசாலாவும், தோசையும் தங்களின் விருப்பமான காலை உணவு எனத் தெரிவித்துள்ளனர். புனே மக்கள் தங்களின் சபுதானா கிச்சடி(ஜவ்வரிசி கிச்சடி)போகாவும் ருசியான காலை உணவு எனக் கூறியுள்ளனர்.
பெங்களூரு மக்கள் தங்களின் காலைநேர உணவாக பெரும்பாலும் மசாலா தோசை, இட்லி-வடை, போகா(பூரி) ஆகியவற்றை விரும்பி உண்கிறார்கள். ஐதராபாத் மக்கள்லுக்மி, ஆம்லெட், சிக்கன் சான்ட்விட்ச் ஆகியவற்றை காலை உணவாக எடுக்கிறார்கள் எனத் தெரியவந்தது.