நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் MBBS,BDS படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு: விண்ணப்பிப்பு தொடங்கியது

By Ezhilarasan Babu  |  First Published Oct 11, 2022, 11:38 AM IST

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில்  சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று முதல் 17-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. 


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில்  சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று முதல் 17-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் தங்களது கலந்தாய்வு தேதியை தேர்வு செய்துகொள்வதற்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 11 ஆகிய இன்று முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 4320 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அதில் 170 இடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான  விண்ணப்ப பதிவுகள் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது.  அதைத் தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு தேதியையும் மருத்துவ  கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. left and Right எந்த செயலும் பள்ளியில் கிடையாது.. அமைச்சர் உறுதி

அதாவது அகில இந்திய அளவிலான ஒதுக்கீட்டு (AIQ) இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் 17 வரை  கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல் மாநிலங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் அக்-17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் கலந்தாய்வில் தேதியை  தேர்வு செய்துகொள்வதற்கு மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 11 இன்று முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிடையில் அக்டோபர் 14 முதல் 18 ஆம் தேதி வரை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு சீட் ஒதுக்கும்  பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி:- 

இதையும் படியுங்கள்:  ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

இந்நிலையில் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வது எப்படி, அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து விவரம் பின்வருமாறு காணலாம்:- அதிகாரபூர்வ மருத்துவ கலந்தாய்வு MCC இணைய தளத்திற்குள் mcc.nic.in என்ற  முகவரிக்குள் செல்ல வேண்டும், முகப்பில் UG மருத்துவ கவுன்சிலிங்களுக்கான இணைப்பை கிளிக் செய்து அதில்  நியு ரிஜிஸ்ட்ரேஷன் என்ற இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதாவது ரோல் நம்பர்,  நீட் அப்ளிகேஷன்கள் நெம்பர், தாய் தந்தையர் பெயர், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீடு உள்ளிட்டவற்றை அதில் பதிவிட வேண்டும்.

தேவையான சுய விவரங்கள் மற்றும் கல்வித் தகுதிகளை அதில் பதிவிட்டு நீட் கவுன்சிலிங் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். பின்னர் தேவையான அனைத்தையும் ஸ்கேன் செய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி அனைத்து விவரங்களையும் மீண்டும் சரிபார்த்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து எதிர்காலத் தேவைகளுக்காக அதை ஒரு பிரிண்ட் எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

click me!