மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
12 ஜோதிர் லிங்களில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காளேஸ்வர் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.
முலாயம் சிங் யாதவ் உடல் சொந்த கிராமத்தில் இன்று தகனம்: ஆயிரக்கணக்கில் மக்கள் அஞ்சலி
இந்த கோயிலை மகாகாள் லோக் என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதன்படி ருத்ரசாஹர் ஏரிப் பகுதியில், 900 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய நடைபாதையும், அதைச் சுற்றி 200 சிலைகளும், சிவன், சக்தி சிலைகளும் அமைக்கப்பட்டன.
நந்தி தவார் மற்றும் பினாகி தவார் என்ற இருநுழைவு வாயில்களும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் சென்று சாமி தரிசனம் சென்று நடைபாதைக்கு செல்லும்வகையில் அமைக்கப்பட்டது.
அழகாக வடிவமைக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களால் 108 தூண்கள், நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன, நடைபாதைகள் அழகான நீர் ஊற்றுகள், சிவபுராணத்தை கூறும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக மகாகாள் லோக் புனரமைப்புத் திட்டத்தின் மதிப்பு ரூ.856 கோடியாகும், இதில் முதல்கட்டமாக ரூ.316 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன. இந்த முதல் கட்ட கட்டமைப்புகளை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
‘உதயசூரியன் சின்னம் கிடையாது.. சிவசேனா கட்சிக்கு 'தீபச் சுடர்' சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்’
மகாகாளேஸ்வர் கோயில் புனரமைப்பு அம்சங்கள்
1. ருத்ர சாஹர் ஏரிக்கரையில் 900 மீட்டர் நீளத்துக்கு மகா காளேஸ்வர் கோயில் பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
2. பிரதான வாயிலில் இருந்து கோயிலுக்கு செல்லும்வரை 93 வகையான சிற்பங்கள், சிவபுராணத்தைக் கூறும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
3. ஒவ்வொரு சிலைக்கும் கியுஆர் கோட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை பக்தர்கள் ஸ்கேன் செய்து, சிலையின் விவரங்கள், கதைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
4. 2வது கட்டத் திட்டத்தில் உஜ்ஜைனில் உள்ள மகாராஜாவாடா, மகாகாள் கேட், ருத்ரசாஹர், ஹரி பதக் பாலம், ராம்காட், கோயிலில் அவசரகாலத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் புனரமைக்கப்பட உள்ளன.
5. மகாராஜாவாடா கட்டிடம் புனரமைக்கப்பட்டு, மகாகாளேஸ்வர் கோயில் வளாகத்துடன் இணைக்கப்படும். பாரம்பரிய தர்மசலா மற்றும் அருங்காட்சியகம் புனரமைக்கப்படும். ஹோட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்பட உள்ளன
आस्था-अध्यात्म की पावन नगरी उज्जैन एक ऐतिहासिक क्षण का साक्षी बनने जा रही है। आज शाम यहां भव्य और दिव्य को राष्ट्र को समर्पित करने का सौभाग्य प्राप्त होगा। हर-हर महादेव! https://t.co/gqCfzuxEM5
— Narendra Modi (@narendramodi)6. மகா காளேஸ்வர் காவல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படஉள்ளது. கார்கள் நிறுத்தும் இடம் மாற்றப்பட்டு, ஒரே நேரத்தில் 200 கார்கள் வரை நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.
7. மகாகாளேஸ்வர் கோயிலின் பூங்கா, தோட்டம் சீரமைக்கப்பட உள்ளது, நடைபாதையும் மேம்படுத்தப்பட உள்ளது.
8. ருத்ரசாஹர் குளத்தில் சேரும் அசுத்தமான நீர் அகற்றப்பட்டு, எதிர்காலத்தில்கழிவுநீர் சேராமல் தடுக்கப்படும். இதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. ருத்ரசாஹர் ஏரி, குளம் முற்றிலுமாக சீரமைக்கப்படும், சுத்தமான நீர் நிரம்பிஇருக்குமாறு பராமரிக்கப்படும்.
9. பொழுதுபோக்கு மையம், யோகா மையம், வேத பாடசாலை, ஆகியவை ருத்ர சாஹர் ஏரி, குளத்தைச் சுற்றி உருவாக்கப்படும்.
10. ஷிப்ரா ஆற்றுப்பகுதியில் உள்ள ராம்காட்டில் வண்ண விளக்குகள் அரங்கு, ஒளிக்காட்சி அமைக்கப்படும்.