சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் உடல் இன்று அவரின் சொந்த ஊரான சைபை கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் உடல் இன்று அவரின் சொந்த ஊரான சைபை கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருகிராமில் இருந்து நேற்று இரவு முலாயம் சிங் யாதவின் உடல் சைபை கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. முலாயம் சிங் யாதவ் உடலைப் பார்த்த கிராம மக்கள், சமாஜ்வாதிக் கட்சித் தொண்டர்கள், “ நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்று உணர்ச்சிப் பெருக்கில் கோஷமிட்டனர்.
82 வயதான முலாயம் சிங் யாதவ் நீண்டகாலமாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நுரையீரல் குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் ‘நேதாஜி’! யார் இந்த முலாயம் சிங் யாதவ்
மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், பலன் அளிக்காமல் நேற்று காலை மரணமடைந்தார். இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மகன் அகிலேஷ் யாதவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முலாயம் சிங் யாதவ் உடல், அவரின் சொந்த ஊரான சைபாலி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று பிற்பகலில் முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்செய்யப்படுகிறது.
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நேற்று இரவிலிருந்து ஏராளமான தொண்டர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதுதவிர முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்சர்கள், பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
என்றுமே நேதாஜிதான் ! முலாயம் சிங் யாதவ் வெற்றி, தோல்வியை கருதாத ஆதரவாளர்கள்
கூட்டத்தினரை ஒழுங்கு படுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முலாயம் சிங் யாதவ் உடலை அவரின் மகன் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் சகோதரர் ஷிவபால் யாதவ் உள்ளிட்டோர் ஆம்புலன்ஸில் இருந்து சுமந்து வந்தனர்.
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு, முதல்வர் ஆதித்யநாத், ஜல் சக்தி அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் எனத் தெரிகிறது
சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் உறுதியாக களமாடிய முலாயம்.. தாங்க முடியாத துயரத்தில் அன்சாரி..
உத்தரப்பி்ரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முலாயம் சிங் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.நள்ளிரவு வரை ஏறக்குறைய 10ஆயிரம் பேர் நேரில் அஞ்சலி செலுத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.