அர்பன் நக்சல்கள் குஜராத்திற்குள் வர பார்க்கிறார்கள்.. அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விளாசிய பிரதமர் மோடி

Published : Oct 10, 2022, 11:29 PM IST
அர்பன் நக்சல்கள் குஜராத்திற்குள் வர பார்க்கிறார்கள்.. அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விளாசிய பிரதமர் மோடி

சுருக்கம்

‘தங்களின் உடைகளை மாற்றி வேஷம் போட்டு அவர்கள் நமது இளைஞர்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ஆற்றல் மிக்க அப்பாவி இளைஞர்கள் சிலர் அவர்கள் ஏமாற்று வேலையால் மயங்கி அவர்களை பின்தொடர்கின்றனர்’ என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.

குஜராத்தின் பாரூச் மாவட்டத்தில் நலத் திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நமது குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற நக்சல்கள் மாறு வேடமணிந்து ஊடுருவ பார்க்கிறார்கள். தங்களின் உடைகளை மாற்றி வேஷம் போட்டு அவர்கள் நமது இளைஞர்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆற்றல் மிக்க அப்பாவி இளைஞர்கள் சிலர் அவர்கள் ஏமாற்று வேலையால் மயங்கி அவர்களை பின்தொடர்கின்றனர். நமது இளம் தலைமுறை அவர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள். நாம் அதை அனுமதிக்கக் கூடாது. நாட்டை அழிக்கத்துடிக்கும் நகர்ப்புற நக்சல்கள் குறித்து நமது குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் நாம் எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும்.

அந்நிய நாட்டு சக்திகளின் ஏஜென்டுகளான அவர்களை குஜராத்திகள் அடித்து வீழ்த்துவார்கள் என நம்புகிறேன். நான் பிரதமராகப் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் உலக அளவில் 10வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டையும், உங்கள் ஆட்சியையும் கவனியுங்க முதல்வரே.! முதல்வர் ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!