
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கூடுதல் மாப்-அப் சுற்று கவுன்சிலிங்கிற்கான கட்-ஆஃப் சதவீதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கூடுதல் மாப்-அப் சுற்று கவுன்சிலிங்கிற்கான கட்-ஆஃப் சதவீதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கூடுதல் மாப்-அப் சுற்று கவுன்சிலிங்கிற்கான கட்-ஆஃப் சதவீதத்தை தேசிய தேர்வு வாரியம் 15 சதவீதம் குறைத்துள்ளது.