
பரிசு பொருட்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை எனலாம். பரிசு பொருட்களை கொண்டு ஒருவர் மீது நாம் வைத்து இருக்கும் அன்பு மற்றும் பாசத்தை எளிதில் வெளிப்படுத்த முடியும். பரிசு பொருட்கள் என்றாலே விலை உயர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நமக்கு அதிகம் பிடித்த நபருக்கு எந்த விலையில் பரிசு வாங்கி கொடுத்தும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் வரவிருக்கும் தந்தையர் தினத்தன்று தந்தைக்கு சர்பிரைசாக பரிசு கொடுக்க முடிவு செய்திருக்கீங்களா? ஆனால் என்ன பரிசு வாங்குறதுனு தெரியலையா? கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலில் உங்களின் பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற பரிசு ஒன்றை வாங்கி கொடுத்து, தந்தையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்தலாம்.
1 - ஸ்மார்ட்போன்: ஸ்மார்ட்போன்கள் இன்று மிகவும் அத்தியாவசியமான சாதனம் என்றாகி விட்டது. மேலும் ஸ்மார்ட்போன்கள் என்றால் பிடிக்காது என யாரும் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. நம்மில் பலரும் சந்தையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என ஆசை கொண்டிருப்போம். அந்த வகையில் உங்களின் தந்தைக்கும் மிகவும் பிடித்த ஸ்மார்ட்போன் ஒன்றை தந்தையர் தின பரிசாக வழங்கலாம்.
2 - இயர்போன்: ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒருவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளவும், இசையில் மூழ்கி அமைதியை பெறச் செய்யவும் இயர்போன்கள் சிறப்பான சாதனமாக விளங்குகிறது. அந்த வகையில், தந்தைக்கு சந்தையில் கிடைக்கும் சிறந்த இயர்போன் ஒன்றை பரிசாக வழங்கலாம். தந்தைக்கு இயர்போன் பிடிக்காத பட்சத்தில் ப்ளூடூத் ஸ்பீக்கர் அல்லது ரேடியோ போன்ற சாதனங்களையும் பரிசாக வழங்கலாம்.
3 - ஸ்மார்ட்வாட்ச்: ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் கிடைக்கும் சிறந்த வாட்ச் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. வழக்கமான ஸ்மார்ட்வாட்ச் என்பதையும் கடந்து, பயனரின் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல்நிலையில் ஏற்பட இருக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அம்சம் ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ளது.
ஒருவேளை ஆப்பிள் வாட்ச் உங்களின் பட்ஜெட்டிற்கு ஒத்துவராது எனில், சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் பிட்னஸ் பேண்ட் அல்லது வேறு பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களை பரிசாக வழங்கலாம்.
4 - பிட்னஸ் பேண்ட்: தந்தையின் உடல்நலன் குறித்த தகவல்களை கண்கானிக்க பிட்னஸ் டிராக்கர்கள் உதவும். இந்திய சந்தையில் பிட்னஸ் டிராக்கர்கள் அனைத்து விலை பிரிவிலும் கிடைக்கின்றன.
5 - டேப்லெட்: அலுவல் பணிகள் அல்லது பொழுதுபோக்கு சார்ந்த பயன்கள் என எல்லாவற்றுக்கும் சிறந்த சாதனமாக டேப்லெட்கள் உள்ளன. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப், கணினிகள் இடையே இருக்கும் இடைவெளியை போக்கும் டேப்லெட்கள் எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வசதி மற்றும் பெரிய ஸ்கிரீன் அளவில் ஸ்மார்ட்போன் போன்ற பயன்பாட்டை வழங்குகிறது.