
நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதன்படி ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (மே.07) நடைபெற்றது.
இதையும் படிங்க: நீரில் மூழ்கிய சுற்றுலாப் படகு... குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... கேரளாவில் நிகழ்ந்த சோகம்!!
நாடு முழுவதும் 499 நகரங்களில், தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் மட்டும் 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 20.9 லட்சம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி.!! நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை
முன்னதாக தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு அறைக்குள் ஸ்மார்ட் வாட்ச், துண்டு காகிதங்கள், கால்குலேட்டர், பெண்டிரைவ், செல்போன், புளூடூத், பர்ஸ், தொப்பி, ஏடிஎம் கார்டுகள், போன்றவை எடுத்துச்செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி, நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மாணவர்களை பரிசோதித்த பின்னரே அவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.