நீட் தேர்வு ரத்து... காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 2, 2019, 1:25 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வெளியிட்டனர். பொதுமக்களுடனும் நிபுணர்களுடனும் ஆலோசித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வெளியிட்டனர். பொதுமக்களுடனும் நிபுணர்களுடனும் ஆலோசித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த அறிக்கையை ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கீழ் 20 துணைக் குழுக்கள் பணியாற்றி உள்ளன. 5 பெரிய திட்டங்களை கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் அறிக்கை விவரம்;-

* ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வருமான உதவித் திட்டத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உத்தேகம் பெறும்.

குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். 

* மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

* 2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

* தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை. 

* நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

* ஜி.எஸ்.டி,. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டுவரப்படும்.

* விவசாயக் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. 

* காஷ்மீர் பிரச்சனைக்கு முன் நிபந்தனையின்றி உரிய தீர்வு காணப்படும்.

* மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

* அனைவருக்கும் உயர்தரமான மருத்துவ சிகிச்சை உறுதிப்படுத்தப்படும்.

* மத்திய பட்ஜெட் 6 சதவீதம் நிதி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்.

* அரசு தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

click me!