வெளியானது நீட் தேர்வு 2023க்கான விடைக்குறிப்பு... விரைவில் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியாகும் என தகவல்!!

Published : May 08, 2023, 11:26 PM IST
வெளியானது நீட் தேர்வு 2023க்கான விடைக்குறிப்பு... விரைவில் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியாகும் என தகவல்!!

சுருக்கம்

நடந்து முடிந்த நீட் தேர்வு 2023-க்கான அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த நீட் தேர்வு 2023-க்கான அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று (மே.07) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடந்து முடிந்தது. நீட் வினாத்தாள் 200 கேள்விகளுடன் 720 மதிப்பெண்களை கொண்டிருந்தது, அதில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. நீட் வினாத்தாளில் கிட்டத்தட்ட 24 செட்கள் உள்ளன.

இதையும் படிங்க: கட்டுக்கடங்காத மணிப்பூர் கலவரம்... மத்திய, மாநில அரசுகளுக்கு பறந்த உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மேலும் சரியான பதில்களைக் கண்டறிய பயிற்சி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பை தேர்வர்கள் சரிபார்க்க வேண்டும். தேசிய தேர்வு முகைமையானது ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு கேள்விகளை கேட்டிருக்கும். ஒரு தொகுப்பில் கேட்கப்பட்ட கேள்வி வேறு தொகுப்புகளில் வராது. இந்த நிலையில் தற்போது நீட் தேர்வின் அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு 2023 வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா! ஏன் தெரியுமா?

தேர்வு முடிந்து 15-20 நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமான NEET 2023 விடைக்குறிப்பு வெளியிடப்படுவதால், NEET 2023 இன் அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு விண்ணப்பதாரர்கள் தங்கள் தரவரிசையை மதிப்பிட உதவும். 2023 NEET வினாத்தாளில் ஏதேனும் தவறான கேள்வி இருந்தால், NTA இன் பாட வல்லுநர்கள் அதை மதிப்பாய்வு செய்வார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கேள்விக்கு முயற்சித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!