பணவீக்கத்தை இந்தியா எப்படி கையாண்டது? உலக புள்ளியியல் அறிக்கை சொல்வது என்ன?

Published : May 08, 2023, 06:54 PM IST
பணவீக்கத்தை இந்தியா எப்படி கையாண்டது? உலக புள்ளியியல் அறிக்கை சொல்வது என்ன?

சுருக்கம்

பணவீக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டதாக உலக புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது. 

உணவு பணவீக்கம் பல நாடுகளில் கவலைக்கிடமான நிலையில் இருந்தபோதும், அதனை இந்தியா திறம்பட கையாண்டதாக உலக புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று பரவலால் கடும் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வந்த சூழலில், கடந்த ஆண்டு திடீரென உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பாதித்தது. இந்த நிலையில், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலில்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதங்கள், அந்நாடுகளின் சகிக்கும் திறனை காட்டிலும் அதிகரித்தது.

இதையும் படிங்க: ரூ.171 கோடி செலவில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு புதுப்பிப்பு.. ஆம் ஆத்மியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

கொரோனா பரவலுக்கு பின் பொருளாதார மீட்சிக்கு பல நாடுகள் போராடி வந்த சூழலில், உக்ரைன் பனிப்போரால் நிலைமை உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பகுதிகளில், உணவு பணவீக்கம் முறையே 8.5 சதவீதம், 19.1 சதவீதம் மற்றும் 17.5 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே லெபனான், வெனிசுலா, அர்ஜெண்டினா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முறையே 352 சதவீதம், 158 சதவீதம், 110 சதவீதம் மற்றும் 102 சதவீதம் என்ற அளவில் உணவு பணவீக்க விகிதங்களை கொண்டு உள்ளன.

இதையும் படிங்க: 2027-ம் ஆண்டுக்குள் இந்த கார்களுக்கு முழுமையான தடை? மத்திய அரசு முக்கிய முடிவு

எனினும், உணவு பணவீக்க விகிதங்களை இந்தியா திறம்பட கையாண்டு உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசக கவுன்சிலின் உறுப்பினரான பேராசிரியர் ஷமிகா ரவி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதனுடன், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள பல்வேறு நாடுகளின் உணவு பணவீக்கம் பற்றிய தரவுகளையும் அதற்கு சான்றாக இணைத்து உள்ளார். இவற்றில் 5 சதவீதத்திற்கு குறைவான உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் வரிசையில், கடைசி 6 இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது கவனிக்கத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!