
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் பழங்குடியினருக்கும் மெய்தே சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது. தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து கோரி மெய்தே சமூகத்தினர் வலியுறுத்தியதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மோதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றதில் இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமரிவில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: ரூ.171 கோடி செலவில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு புதுப்பிப்பு.. ஆம் ஆத்மியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்
அப்போது வன்முறைக்குப் பிறகு நிவாரண முகாம்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், அங்கு தங்கியுள்ள மக்களுக்கு உணவு, ரேஷன் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தா, வன்முறையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணவீக்கத்தை இந்தியா எப்படி கையாண்டது? உலக புள்ளியியல் அறிக்கை சொல்வது என்ன?
இதை அடுத்து இடம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்களை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அதற்குள் புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.