நீட் விடைத்தாள் வெளியீடு - ஆட்சேபணை இருந்தால் நாளை மாலை வரை டைம்!!

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
நீட் விடைத்தாள் வெளியீடு - ஆட்சேபணை இருந்தால் நாளை மாலை வரை டைம்!!

சுருக்கம்

neet answer papers released

நீட் தேர்வு விடைத்தாளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் நாளை மாலைக்குள் 1000 ரூபாய் பணம் செலுத்தி கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாணவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 7 ஆம் தேதி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.

இந்த நீட் தேர்வின் போது பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கபட்டன. மேலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வந்தனர்.

இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து இதுகுறித்த வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாநில உயர் நீதிமன்றங்கள் நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.

இதனால் நீட் தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தடை நீங்கியதையடுத்து ஒரு வாரத்தில் மருத்துவ விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நீட் தேர்வுக்கான விடைத்தாளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மேலும் ஆட்சேபனை இருந்தால் 1000 ரூபாய் பணம் செலுத்தி இன்று மற்றும் நாளை மாலைக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!