நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது? மாணவர்கள் கவனிக்கவேண்டிய தகவல்கள்

By SG BalanFirst Published Jan 5, 2023, 9:21 AM IST
Highlights

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை ஆண்டு தோறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யுஜி (NEET UG) நுழைவுத் தேர்வை நடத்துகிறது. 2023ஆம் ஆண்டில் இந்தத் தேர்வை மே 7ஆம் தேதி நடத்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பெறத் தொடங்கும்போது தேர்வுக்கான முழுமையான அட்டவணையும் வெளியிடப்படும்.

மருத்துவப் படிப்பை மேற்கொள்ள தயார் செய்துவரும் மாணவ மாணவியர் தேசிய தேர்வுகள் முகமையின் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அரைத்த மாவையே அரைக்கும் திமுக அரசு.! மாணவர்கள், பெற்றோர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- இபிஎஸ் ஆவேசம்

விண்ணப்பக் கட்டணமும் விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு ரூ.1,400, இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.800 கட்டணமாகப் பெறப்பட்டது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் யுஜி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இந்தத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, மருத்துவக் கவுன்சில் கமிட்டி நடத்திய பி.டி.எஸ். மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளுக்கான இரண்டாவது மாதிரித் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

நீட் தேர்வு வழக்கு..! விசாரணையை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசு.! எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்

click me!