பெங்களூரு - Carpooling செயலிகளுக்கு தடை இல்லை.. ஆனால்.. அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறிய தகவல் என்ன?

By Ansgar R  |  First Published Oct 2, 2023, 4:39 PM IST

பெங்களூரில் கார்பூலிங் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறினால் சுமார் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அண்மை வெளியான செய்தி, அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டாக்சி ஓட்டுநர் சங்கங்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கர்நாடகாவின் போக்குவரத்து மற்றும் முஸ்ராய் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அதில் "கார்பூலிங்கிற்கு எந்த தடையும் இல்லை என்று தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார், ஆனால் அதே நேரத்தில் இந்த பயன்பாடுகள் சட்டப்பூர்வமாக செயல்படுத்த தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையானது, சட்டவிரோதமாக இயங்குவதாகக் கூறும் கார்பூலிங் ஆப்ஸின் செயல்பாடுகளை நிறுத்துமாறு டாக்சி மற்றும் ஆட்டோ சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினர். மேலும் ராமலிங்க ரெட்டி, கார்பூல் செயலி ஒருங்கிணைப்பாளர்களுடன் நாளை காலை 10 மணிக்கு இந்த விஷயத்தைப் பற்றிய கூடுதல் விவாதத்திற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். 

Tap to resize

Latest Videos

சரி கார் பூலிங் என்றால் என்ன?

பெங்களூரு போன்ற கூட்ட நெரிசல் அதிகம் நிறைந்த ஒரு மாநிலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று தான் இந்த கார் பூலிங். அதாவது பீக் ஹவர்ஸில் பெங்களூருவின் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் கார்பூலிங் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகக் கருதப்பட்டது, ஏராளமான ஐடி ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வேலைக்குச் செல்ல இந்தச் சேவைகளை நம்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரயாணியாக ஒருவர் மட்டும் தனியாக அதில் பயணம் செய்யாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சேர்ந்து பயணம் செய்யும் முறை தான் கார் பூலிங். சமீபத்தில், கார்பூலிங் சேவைகள் தங்களது அன்றாட வருமானத்தை பாதிக்கிறது என்று டாக்சி சங்கங்கள் கவலை தெரிவித்ததோடு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், டாக்சி சங்கங்கள், ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கத்துடன் இணைந்து பெங்களூருவில் பந்த் நடத்தி, கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது தான்.

அது குறித்த ஒரு தனி கோரிக்கையும் ஏற்கனவே பெங்களூரு அரசிடம் முன்வைக்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சார்பூலிங் சேவைகள் குறித்தும் ஒரு முக்கிய கோரிக்கை, பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ மற்றும் டாக்சி சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 

 

click me!