குஜராத் கடற்பகுதியில் யாரும் இல்லாத நிலையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த படகு மற்றும் அதில் இருந்த ரூ.200 கோடி போதைப்பொருட்களை இந்திய கடற்படையினர், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் கடற்பகுதியில் யாரும் இல்லாத நிலையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த படகு மற்றும் அதில் இருந்த ரூ.200 கோடி போதைப்பொருட்களை இந்திய கடற்படையினர், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் கடலோர பாதுகாப்பு படையினரும், குஜராத் தீவிரவாத ஒழிப்பு படையினரும் இன்று கூட்டு ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் கடற்பகுதியில் இருந்து 6மைல் தொலைவில் இந்திய கடற்பகுதிக்குள் ஒரு சிறிய படகு நின்றிருந்தது.
டெல்லியை கோட்டை விட்ட பாஜக; பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ் முயற்சி; ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆப்பு!!
அந்த படகை கடலோரக் காவல் படையினர் ஆய்வு செய்தபோது, அதில் 40 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.200 கோடியாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த படகில் அல் தயாசா என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த படகையும், அதில் இருந்த போதைப் பொருட்களையும் கடலோர பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அகற்றம்! விப்ரோ, பிரஸ்டீஜ், ஐடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இதற்கு முன் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 2,888 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடியாகும். இதுதான் குஜராத் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப் பொருளாகும்.
கடந்த மாதம் இந்திய கடற்பகுதிக்குள், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் கடல்எல்லைக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு மீன்பிடிப் படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.