கட்சியும், சின்னமும் சரத் பவாரிடம்தான் இருக்க வேண்டும்: சுப்ரியா சுலே!

By Manikanda Prabu  |  First Published Oct 1, 2023, 5:18 PM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர் சரத் பவார் என்பதால், சின்னம் அவரிடம்தான் இருக்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
 


தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சண்டை எதுவும் இல்லை. கட்சியின் சின்னம் யாரிடம் போகும் என்ற கேள்விக்கே இடமில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர் சரத் பவார். எனவே, சின்னம் அவரிடம்தான் இருக்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி.,யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “25 வருடங்களுக்கு முன்பு சரத்பவார் உருவாக்கிய கட்சி தேசியவாத காங்கிரஸ். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தெரியும் என்றால், அது சரத் பவாரால்தான். கட்சியின் தேசிய தலைவராக சரத் பவார், மகாராஷ்டிரா மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளனர். கட்சியின் சின்னம் யாரிடம் போகும் என்ற கேள்விக்கே இடமில்லை. கட்சியை உருவாக்கியவர் சரத் பவார். எனவே, சின்னம் அவரிடம்தான் இருக்க வேண்டும் என்பது வெளிப்படையானது.” என்றார்.

Tap to resize

Latest Videos

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஏக்நாத்  ஷிண்டே தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகியுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

இந்த பிளவால், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரி கடந்த ஜூலை மாதம் அஜித் பவார் தேர்தல் ஆணையத்தை அணுகினார். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கட்சியின் இரு அணிகளுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. இதுதொடர்பான முதல் விசாரணை அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பிரிவினர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து சரத் பவார் தலைமையிலான என்சிபி குழுவிடம் விளக்கம் கேட்டு கடந்த ஜூலை மாதம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 

அஜித் பவார் தாக்கல் செய்த மனுவில், “1968 ஆம் ஆண்டு சின்னங்கள் ஆணையின் விதிகளின்படி அஜித் பவாரை என்சிபி தலைவராக அறிவிக்க வேண்டும். கட்சியின் கைக்கடிகாரம் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும்.” என்று கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அஜித் பவார் தனது கோரிக்கைக்கு ஆதரவாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளின் பிரமாணப் பத்திரங்களுடன் மனுவை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!