ntse exam:ncert: மாணவர்களுக்கான என்டிஎஸ்இ உதவித் தொகைத் திட்டம் நிறுத்திவைப்பு: என்சிஇஆர்டி அறிவிப்பு

By Pothy RajFirst Published Oct 8, 2022, 10:30 AM IST
Highlights

மாணவர்களுக்கான தேசிய திறன் தேடல் தேர்வு(NTSE)(நேஷனல் டேலன்ட் சேர்ச் எக்ஸாமிநேஷன் என்டிஎஸ்இ) திட்டம் அடுத்து உத்தரவு வரும்வரை நிறுத்திவைப்பதாக என்சிஇஆர்டி(NCERT) அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கான தேசிய திறன் தேடல் தேர்வு(NTSE)(நேஷனல் டேலன்ட் சேர்ச் எக்ஸாமிநேஷன் என்டிஎஸ்இ) திட்டம் அடுத்து உத்தரவு வரும்வரை நிறுத்திவைப்பதாக என்சிஇஆர்டி(NCERT) அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு 11ம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கும் இந்தத் திட்டம் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால், என்சிஇஆர்டி அமைப்பால் வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சொகுசு பஸ் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 11 பேர் கருகி பலி:20 பேர் காயம்

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த உதவித்தொகை பெறும் திட்டத்துக்குத்தான தேர்வு இரு கட்டமாக நடத்தப்படும்.ஸ்டேஜ் -1 மாநிலஅளவிலும், ஸ்டேஜ்-2 தேர்வு தேசிய அளவிலும் நடத்தப்படும்.

இந்நிலையில் என்சிஇஆர்டி வெளியிட்டஅறிவிப்பில் “ மாணவர்களுக்கு உதவித்தொகை தரும் தேசிய அறிவுத்திறன் தேடுதல் திட்டம் முழுவதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுவது. என்டிஎஸ் திட்டத்தை என்சிஇஆர்டி நடைமுறை மட்டுமே செய்கிறது. 

2021, மார்ச் 31ம் தேதிவரை மட்டுமே இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. அதன்பின் இந்த உதவித் தொகை திட்டத்தை நீட்டிக்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை, என்பதால், இந்தத் திட்டம் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படும்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்

இது குறித்து என்சிஇஆர்டி அதிகாரி கூறுகயைில் “ என்டிஎஸ் திட்டத்தை மத்திய அரசு மறு சீரமைப்பு செய்ய இருக்கிறது. இது தொடர்பாக ஆலோசனையும் நடந்து வருகிறது. அதாவது உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உதவித்தொகையை அதிகரிப்பது போன்றவை ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், எப்போது மீண்டும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரியாது” எனத் தெரிவித்தார்.

என்டிஎஸ்சி தேர்வு மாணவர்களுக்கு ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் நடத்தப்படும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கும் இளங்கலை பட்டப்படிப்பு முதல் முனைவர் பட்டம் பெறுவோர் வரை இந்த உதவித் தொகை திட்டத்தில் தேர்வு எழுதி பயன் பெறலாம்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250, இளநிலை மற்றும் முதிநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

மொபைல் & டிவிக்கு தடை போடும் அதிசய கிராமம்.. அடேங்கப்பா.!! கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்

பட்டியலின மாணவர்களுக்கு 15 %, பழங்குடியினருக்கு 7.5%, 27% பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 4% மாற்றுத்திறனாளி மாணவர்கள் என ஆண்டுதோறும் 2ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது


 

click me!