குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாப் மறைவு - இரங்கல் நிகழ்வில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!

By Ansgar R  |  First Published Dec 18, 2023, 10:10 AM IST

Kuwait King Nawaf Al Ahmad : குவைத் நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் சென்ற பல தலைவர்களில் முக்கியமான தலைவரான குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் முகமது ஜாஃபர் தனது 86 ஆவது வயதில் மரணித்துள்ளார்.


குவைத் நாட்டின் மன்னரான ஷேக் நவாப் அல் அஹ்மத் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி காலமானார். இவர் குவைத் நாட்டில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். இவர் நேற்று முன்தினம் டிசம்பர் 16ஆம் தேதி தனது 86 ஆவது வயதில் மரணித்த நிலையில் அவரது உடல் நேற்று டிசம்பர் 17ஆம் தேதி சுலைபிகாட் என்ற கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

உலக தலைவர்கள் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற அவருடைய இரங்கல் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய அரசின் சார்பாக மத்திய அமைச்சர் ஹரீதீப் சிங் பூரி நேற்று குவைத் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். குவைத் மன்னர் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா.. வாஷிங்டனில் கார் பேரணி நடத்தி கொண்டாடிய இந்துக்கள்.. 

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் நேற்று டிசம்பர் 17ம் தேதி ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மறைந்த மன்னரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு இந்திய அரசின் சார்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் நேற்று குவைத் புறப்பட்டு  சென்றார். 

லண்டன் நகரம்.. காணாமல் போன இந்திய மாணவர்.. வெளியுறவு அமைச்சர் உடனே உதவ வேண்டும் - பாஜக தலைவர் வேண்டுகோள்!

மேலும் அங்கு நடந்த இறுதிச் சடங்குகளில் அவர் பங்கேற்றார் குவைத் நாட்டின் பெரும் வளர்ச்சிக்கும் தொலைநோக்கு பார்வைக்கும் முக்கிய காரணமாகவும் பல விதங்களில் பங்கு வகித்தவருமாக திகழ்ந்தவர் மறைந்த மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!