National Investigation Agency : ஐ.எஸ்.ஐ.எஸ் சதி வழக்கு தொடர்பாக மத்திய பயங்கரவாத தடுப்பு அமைப்பு இன்று காலை மகாராஷ்டிராவில் 40 இடங்களில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதே வழக்கு தொடர்பாக கர்நாடகாவில் மற்றொரு இடத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் தானே, புனே, மீரா பயந்தர் உள்ளிட்ட 40 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது என்று அம்மாநில செய்தி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான இடங்கள் தானே ரூரல் (31 இடங்கள்) மற்றும் தானே நகரம் (9 இடங்கள்), மும்பைக்கு அடுத்ததாக உள்ளன. புனேவில் இரண்டு இடங்களிலும், மீரா பயந்தரில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிகாலை சோதனைகள் நடந்தன.
பின்னர் இந்த வழக்கு மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்டில், ஒரு சந்தேக நபர் - Aakif Ateeque Nachan - வெடிபொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ISIS பயங்கரவாத தொகுதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது குற்றவாளி அவர்.
மனைவிக்கு 18 வயதுக்கு மேல் இருந்தால், திருமண பலாத்காரம் 'குற்றமில்லை': அலகாபாத் உயர் நீதிமன்றம்
மும்பையைச் சேர்ந்த தபிஷ் நாசர் சித்திக், புனேவைச் சேர்ந்த அபு நுசைபா மற்றும் அட்னான் சர்க்கார் என்ற சுபைர் நூர் முகமது ஷேக் மற்றும் தானேயைச் சேர்ந்த ஷர்ஜீல் ஷேக் மற்றும் சுல்பிகர் அலி பரோடாவாலா ஆகிய ஐந்து பேர் ஒரு மாதத்திற்கு முன்பு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டனர்.