மனைவிக்கு 18 வயதுக்கு மேல் இருந்தால், திருமண பலாத்காரம் 'குற்றமில்லை': அலகாபாத் உயர் நீதிமன்றம்
மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், திருமண பலாத்காரத்தை குற்றமாக கருத முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 2012 பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தனது கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை சிதைந்துவிட்டது என்றும், தன்னை வாய்மொழியாக உடல் ரீதியான வன்முறைக்கு உட்படுத்தியதாகக் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.
தனது கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக தனது அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் மனைவி கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அந்த கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி பிரிவு 377-ன் கீழ் தண்டிக்க முடியாது என்று கூறியது. மேலும் இந்த நாட்டில் திருமண பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்றும் நீதிபதி ராம் மனோகர் நாராயண் தெரிவித்தார்.
திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனைவிக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமண பலாத்காரத்திற்கு குற்றவியல் தண்டனை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி, திருமண உறவில் எந்த 'இயற்கைக்கு மாறான குற்றமும்' (பிரிவு 377 ஐபிசியின்படி) நடைபெற இடமில்லை என்று கூறியது. மேலும், வழக்கின் மருத்துவச் சான்றுகள் இயற்கைக்கு மாறான பாலுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்பதை நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.! மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்..!
இந்த ஆண்டின் தொடக்கத்தில், திருமண பலாத்காரத்தை குற்றமாகக் கருதும் மனுக்களை பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.