நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.9 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

By SG Balan  |  First Published Nov 21, 2023, 8:43 PM IST

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், பத்திரிகையின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், பத்திரிகையின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

முடக்கப்பட்டதில் டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள அசையாச் சொத்துக்களின் மதிப்பு 661.69 கோடி ரூபாய். ஏஜேஎல் பங்கு முதலீடு மூலம் யங் இந்தியா நிறுவனத்திற்குக் கிடைத்த ரூ.90.21 கோடியும் முடக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அயோத்தி ராமருக்காக மொத்த சொத்தையும் விற்று நன்கொடை அளித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள சொத்து முடக்க அறிவிப்புக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பாஜக மாநிலத் தேர்தல் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு முயற்சி செய்வதாகவும் இது அவர்களின் விரக்தியைப் பிரதிபலிக்கிறது என்றும் சாடியுள்ளார்.

மேலும், பாஜக வஞ்சகத்துடன் பொய் குற்றச்சாட்டுகளைக் கட்டமைப்பு செய்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகியவை தான் பாஜகவின் கூட்டணியில் உள்ளன என்றும் விமர்சித்துள்ளார்.

முதல் முறை அல்ல... மகளிர் கிரிக்கெட்டிலும் தோல்விக்குப் பின் தோள் கொடுத்த பிரதமர் மோடி!

click me!