இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, அயோத்தி ராமர் கோயிலுக்காக நன்கொடைகள் மூலம் சுமார் 3,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துகள் அனைத்தையும் விற்று 5 கோடி ரூபாய் பணத்தை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காகக் கொடுத்திருக்கிறார்.
தீவிர ராம பக்தரான எஸ். லட்சுமி நாராயணன் தனது சேமிப்பில் இருந்த பணத்தைக் கொடுத்தது மட்டுமின்றி, தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து மொத்த தொகையையும் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
undefined
1970ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் மத்திய உள்துறை செயலாளராகப் பணிபுரிந்தவர். நன்கொடை அளித்தது பற்றி வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று லட்சுமி நாராயணன் விரும்பியுள்ளார். ஆனால், கோயில் அறக்கட்டளை அவரது நன்கொடையைப்பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறது. லட்சுமி நாராயணன் அளித்த 5 கோடி ரூபாய் நன்கொடை கோயிலில் நிறுவப்படும் 151 கிலோ எடை கொண்ட ராமசரிதமனாஸ் சிற்பத்திற்காக பயன்படுத்தபடும் என்று அறக்கட்டளை கூறியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.751.9 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை தகவல்
10,902 ஸ்லோகங்களைக் கொண்ட ராமசரிதமனாஸ் காவியத்தின் காட்சிகள் தாமிரத்தால் வடிவமைக்கப்பட்டு, 24 காரட் தங்கத்தில் முலாம் பூசப்படும். இதற்கு 140 கிலோ செம்பு மற்றும் ஐந்து முதல் ஏழு கிலோ தங்கம் தேவைப்படும். மற்ற உலோகங்கள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் தனது மனைவியுடன் அயோத்திக்குச் சென்ற லட்சுமி நாராயணன், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராயிடம் நன்கொடை அளிப்பது குறித்து விசாரித்துள்ளார். பின் தான் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் விற்று மொத்தம் 5 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
நாராயணன் சிவில் சர்வீசஸ் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நாராயணன் ஒரு பெரிய நிதி நிறுவனத்தில் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 2009 முதல் STFC இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அன்று வேங்கை வயல்... இன்று திருவந்தவார்... காஞ்சிபுரம் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த அவலம்!
"ராமர் கோயில் கட்டுவதற்கு சுமார் 1,800 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் 12 மணி நேரம் திறந்திருந்தால் 70,000-75,000 பேர் எளிதாக தரிசனம் செய்யலாம்." என்று ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“கடவுள் என் வாழ்நாள் முழுவதும் என்னை ஏராளமாக ஆசீர்வதித்திருக்கிறார். நான் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன், என் வாழ்க்கை வளமாக உள்ளது. ஓய்வு பெற்ற பிறகும், நான் தொடர்ந்து கணிசமான வருமானத்தைப் பெறுகிறேன். எனவே என் ஓய்வூதியம் பெரும்பாலும் அப்படியேதான் உள்ளது. எனவே இந்த நன்கொடையை கடவுள் எனக்கு வழங்கியதைத் திருப்பித் தரும் வாய்ப்பாக நம்புகிறேன். சொத்துக்களைக் குவிப்பதைவிட, அவற்றைக் கடவுளின் காலடியில் வைப்பது மிகவும் அர்த்தமுள்ளது என்று கருதுகிறேன்” எனது லட்சுமி நாராயணன் தெரிவிக்கிறார்.
கோயில் கட்டுமானத்திற்கான நிதி பக்தர்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசாங்கத்தின் எந்தத் தலையீடும் இதில் இல்லை என்று ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சொல்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, நன்கொடைகள் மூலம் சுமார் 3,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி படிச்சிருந்தா போதும்! உடனே அப்ளை பண்ணுங்க!