தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! பாதிக்கு மேல் உ.பி.யில் தான்!

By SG Balan  |  First Published Dec 6, 2023, 4:29 PM IST

தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன.


கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 2.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில் கிட்டத்தட்ட பாதி புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளன. 1,20,093 புகார்கள் உ.பி. மாநிலத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

உ.பி.க்கு அடுத்தபடியாக டெல்லி (22,231), மகாராஷ்டிரா (11,562), ஹரியானா (11,225) ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

எதிரிகளிடம் உஷாரா இருங்க... 70 வருஷ பழக்கம் ஈஸியா போகாது... காங்கிரஸை பொளந்து கட்டிய பிரதமர் மோடி!

National Commission for received 2.34 lakh complaints in last 5 years, of which almost half are from alone. Followed by , and - Govt tells in response to Q No. 480 asked by MP
State wise data 👇 pic.twitter.com/DQjBIeG1S5

— Maadhyam (@_maadhyam_)

இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து 4559, கேரளாவில் இருந்து 1551, ஆந்திரப் பிரதேசத்தில் 2131, தெலுங்கானாவில் 2325 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. 22ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை தி.மு.க., எம்.பி., செந்தில் குமார் இந்தி பேசும் மாநிலங்களை 'கோ மூத்திர மாநிலங்கள்' என்று குறிப்பிட்டுப் பேசியது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், இன்று (புதன்கிழமை)  திமுக எம்.பி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் எம்.பி., செந்தில் குமார் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துப் பேசினார்.

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!

click me!