இன்னொரு பலாத்காரம் நடக்கும் வரை பொறுத்திருக்க முடியாது: நீதிபதி சந்திரசூட் காட்டம்

By SG Balan  |  First Published Aug 20, 2024, 6:13 PM IST

கொல்கத்தா பலாத்கரா வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல அழுத்தமான கேள்விகளை எழுப்பினார்.


கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுகலை பட்டதாரி பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

Tap to resize

Latest Videos

undefined

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, சமூகத்தில் மாற்றம் நிகழ்வதற்காக நாடு மற்றொரு பலாத்காரம் நிகழும் வரை காத்திருக்க முடியாது என்று காட்டமாகக் கூறினார்.

அஜ்மீர் பலாத்கார வழக்கு: 250 பெண்கள் சூறையாடிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏன் என்றும், வழக்கைக் கையாள்வதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மேற்கு வங்க அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

"மருத்துவத் தொழில் வன்முறைக்கு ஆளாகிவிட்டது. வேரூன்றிய ஆணாதிக்கத்தால் பெண் மருத்துவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். மேலும் மேலும் பெண்கள் பணிக்குச் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், சமூகத்தில் கூண்கூடான மாற்றம் வருவதற்கு மற்றொரு பலாத்காரம் நடக்கும் வரை காத்திருக்க முடியாது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, உடல் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ​​தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல அழுத்தமான கேள்விகளை எழுப்பினார்.

"முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார்? எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை; சடலம் பெற்றோரிடம் தாமதமாக ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் என்ன செய்கிறது? கடுமையான குற்றம் நடந்துள்ளது, குற்றம் நடந்த இடம் மருத்துவமனையில் உள்ளது... அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

மாதம் ரூ.10 லட்சம்... புது வீடு... யூடியூப் சேனல் தொடங்கி சொகுசாக செட்டில் ஆன லாரி டிரைவர்!

click me!