"இயற்கை எரிவாயு திட்டமா? உள்ளே கால் வைக்கக்கூடாது" - மத்திய அரசுக்கு நாராயணசாமி எச்சரிக்கை..

 
Published : Feb 25, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"இயற்கை எரிவாயு திட்டமா? உள்ளே கால் வைக்கக்கூடாது" - மத்திய அரசுக்கு நாராயணசாமி எச்சரிக்கை..

சுருக்கம்

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அனால் இந்த போராட்டங்களுக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு தனியார் கம்பெனிகள் மூலம் நிலத்தடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் இதுவரை புதுச்சேரி அரசுக்கு வந்து சேரவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காரைக்காலில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசுக்கு கடிதம் வந்தால் விவசாயிகளின் நலன் கருதி அதை அனுதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்க்கின்ற, அவர்களது வாழ்க்கையை பாழடிக்கும் இந்த ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு எந்த வகையிலும்  ஏற்காது என தெரிவித்தார்.

அதே நேரத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்

PREV
click me!

Recommended Stories

ராகுல், சோனியாவுக்கு நிம்மதி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை நிராகரித்த டெல்லி நீதிமன்றம்!
மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!