"சின்னப் பிள்ளை ராகுலை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்" - அமித்ஷா கிண்டல்

 
Published : Feb 25, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"சின்னப் பிள்ளை ராகுலை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்" - அமித்ஷா கிண்டல்

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கி வருகின்றனர் .

இதே போன்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மாயாவதி ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசி கட்ட அனல் பறக்கு பிரச்சாரத்தால் உத்தரபிரதேசம் தகித்துக் கிடக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு  பக்குவம் இல்லை என்றும் அவருக்கு அரசியல் அனுபவமும், பக்குவமும் வர கொஞ்சம் அவகாசம் தாருங்கஎன முன்னாள் டெல்லி மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின், மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க,. தேசிய தலைவர் அமித்ஷா, பக்குவம் இல்லாத ராகுலை உத்தர பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ‛2 ஆண்டு கால ஆட்சி குறித்து ரிப்போர்ட் கார்டு கேட்கும் ராகுல் காந்தி  60 ஆண்டு கால காங்கிரஸ்  ஆட்சி பற்றி ரிப்போர்ட் கார்டு தருவாரா? என கேள்வி எழுப்பினார்

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!