பி.எப். மூலம் கடன் பெற்று வீடு வாங்கும் திட்டம் - அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது 

First Published Feb 24, 2017, 10:01 PM IST
Highlights


பி.எப். கணக்கில் இருந்து கடன் பெற்று, சொந்தமாக வீடு வாங்கும் திட்டம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. கடன் பெற்று மாத தவனையாக மூலம் செலுத்த முடியும்.

இது குறித்து பி.எப். அமைப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இ.பி.எப்.ஓ. அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 4 கோடி தொழிலாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்து சொந்தமாக வீடு வாங்கும் திட்டத்தை ஏற்கனவே அரசு கூறியிருந்தது.

இந்த திட்டம் 5 மாநிலத் தேர்தல் முடிந்தபின், மார்ச் 8-ந்தேதிக்கு பின் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த திட்டத்தின்படி, பி.எப். அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் பணிக்காலம் முடிவதற்குள் தங்களின் பி.எப். பணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகையை கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்க முடியும். இந்த தொகையை மாதத் தவனையாக செலுத்திக்கொள்ளலாம்.

இதன்படி, பி.எப். தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் வங்கிகள், மற்றும்  பில்டர்கள், அல்லது வீடு விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து வீடு வாங்க முடியும். 

மத்தியஅரசின்பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனை இந்த குழுக்கள் பெற இயலும்.

மேலும், முறைப்படுத்தப்பட்ட அமைப்பின் தொழிலாளர்கள் தங்களின் கடன்பெறும் தகுதியை பி.எப். அமைப்பிடம் உறுதி செய்ய வேண்டும்.

அதன்பின், அந்த உறுப்பினர் கடன் பெற தகுதியானவர், திருப்பிச்செலுத்தும் தகுதி உடையவர் என்று பி.எப். சான்று அளிக்கும்.

வீடு வாங்கும் நிறுவனம், வங்கி, பில்டர்கள் ஆகியோருடன் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பி.எப். உறுப்பினர்கள் குழு மூலமே அதை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கடனையும், மாதத்தவனையையும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நிறுத்திவைக்க பி.எப். அமைப்புக்கு அதிகாரம் உண்டு'' எனத் தெரிவித்தார்.

click me!