பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி – ஆந்திர அரசு அறிவிப்பு

 
Published : Feb 24, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி – ஆந்திர அரசு அறிவிப்பு

சுருக்கம்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர்  பதவியை ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஆந்திர அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றையும் பி.வி. சிந்துவிற்கு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்தது. அதன்படி பி.வி.சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர்  பதவியை ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓய்வுக்கு முன் 'சிக்ஸர்' அடிக்கும் நீதிபதிகள்.. தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை!
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்