உலகிலேயே தற்கொலையில் இந்தியா முதலிடம் …. உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்….

 
Published : Feb 25, 2017, 06:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
உலகிலேயே தற்கொலையில் இந்தியா முதலிடம் …. உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்….

சுருக்கம்

உலகிலேயே தற்கொலையில் இந்தியா முதலிடம் …. உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்….

மன அழுத்தம், பொருளாதார நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக  உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவைப் போன்று நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2௦15 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

2015 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,88,000 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2005 முதல் 2015 வரை உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சராசரியாக 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.  

 

உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!