
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும், புதுச்சேரி பிடிக்கவில்லை என்றால் உடனடியாக இங்கிருந்து வெளியேறலாம் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுசேரி மாநிலத்தின் முதலமைச்சருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் தான் நடந்து கொள்வதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதைப் பார்த்துக் கொண்டு தன்னால் சும்மா இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகாரங்களை குறைடகக வேண்டும் என்றார். அவர் தனது அதிகாரங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் நாராயணசாமி பேட்டுக் கொண்டார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய பல திட்டங்களுக்கு கிரண் பேடி முட்டுக்கட்டை போடுவதாகவும், , புதுச்சேரி பிடிக்கவில்லை என்றால் உடனடியாக இங்கிருந்து வெளியேறலாம் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.