
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே 7 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் 8-ஆவது நகரமாக கொச்சியில் இன்று மெட்ரே8 ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கட்டா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் தற்போது கேரள மாநிலம் கொச்சியுல் தொடங்கப்படவுள்ளது.
5008 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 கிலோ மிட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில்பாதை 45 மாதங்களில் அமைக்கப்பட்டன. இந்த பாதையில் 23 ரயில் நிலையங்கள் உள்ளன.
மேலும் கொச்சி மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவசமாக மிதிவண்டி சேவைவை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகள் எந்தவித செலவுமின்றி மிதிவண்டி மூலமாக நகரத்தை சுற்றி பார்க்க முடியும்.
கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் மொத்தமாக 60 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கொச்சி மெட்ரோ வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 80 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தனை சிறப்பு வாய்ந்த கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.