
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அந்த ரயிலிலேயே அவர் பயணம் செய்தார்.
சென்னை உள்பட 7 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே நடைபெற்று வருகிறது. 8வது நகரமாக கொச்சியில் இன்று மெட்ரே ரயில் சேவை தொடங்கியது.
ரூ.5008 கோடி மதிப்பில் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில்பாதை 45 மாதங்களில் அமைக்கப்பட்டன. இந்த பாதையில் 23 ரயில் நிலையங்கள் உள்ளன.
இதுபோன்ற சிறப்பு வாய்ந்த கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், அதே ரயிலில் அவர் பயணம் செய்தார். அவருடன் கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.
கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் மொத்தமாக 60 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கொச்சி மெட்ரோ வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 80 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.