
ஆதார்’ கார்டு, ‘பான்’ கார்டில் உள்ள பெயர்கள் மற்ற விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை ஆன்-லைனில் திருத்திக் கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆதார் கார்டை, பான் கார்டு உடன் இணைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில், இரு பிரத்யேக தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்டாயம்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார் கார்டு கட்டாயம் என்று திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இணைக்கும் வசதி
இதையடுத்து, கடந்த வாரம், ஆதார் எண்ணை, பான் கார்டு உடன் இணைக்கும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து இருந்தது. இதில் ஆதார் கார்டில்ஒரு பெயரும், பான் கார்டில் ஒரு பெயரும் ஒருவருக்கு இருந்தால் கூட, பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை பதிவு செய்து, பான் கார்டுடன், ஆதார் கார்டைஇணைக்கலாம்.
பெயர் திருத்தம்
இந்நிலையில், ஆதார், பான் கார்டில் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருந்தால் அதை திருத்தும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதில் முதலாவது தளத்தில் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில் பெயர் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்து கொள்ள முடிடும். இந்தியர்கள் அல்லதுவௌிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
சுயசேவை
இரண்டாவது தளம் என்பது, தனிநபர்கள் தங்களின் ஆதார் விவரங்களை கூடுதலாக பதிவு செய்ய நினைப்பவர்களுக்கானது. அதாவது, ஆதார் சுயசேவை மூலம் விவரங்களை பதிவு செய்யும் தளமாகும். இதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி விவரங்களை மாற்றி அமைக்க முடியும். இதில் சம்பந்த நபர், தனது விவரங்கள், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம்.
இப்போடு நாட்டில் 111 கோடி மக்களுக்கு ஆதார் கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 கோடி பேருக்கு மட்டுமே பான் கார்டு இருக்கிறது. இதில், வருமான வரி செலுத்தும் 6 கோடி பேரில், 1.22 கோடி பேர் மட்டுமே ஏற்கனவே பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைத்துவிட்டனர்.