தாவுத், ஹபீஸை ஏன் இந்தியா அழைத்து வரவில்லை? - மத்திய வௌியுறவுத்துறை அமைச்சகம் ‘அதிர்ச்சி’ விளக்கம்

First Published May 14, 2017, 3:23 PM IST
Highlights
central ministry explanation about dawood hafeez


மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளி தாதா தாவுத் இப்ராஹிம், 2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயித் ஆகியவை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆர்.டி.ஐ. மனு

ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயித், மும்பைநிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிம் ஆகியோரை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மனு அளிக்கப்பட்டு இருந்து. அந்த மனுவுக்கு மத்திய வௌியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வேண்டுகோள் இல்லை

மத்திய வௌியுறவுத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது-

1993ம் ஆண்டு, 260 பேர் பலியான மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளியான தாவுதி இப்ராஹிம் இந்தியாவில் இருந்து தப்பி, பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார்.

அதேபோல, 166 பேர் கொல்லப்பட்ட, 2008ல் மும்பை  தாக்குதலுக்கு முளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத குழுவின் தலைவர் ஹபிஸ் சயித்தும் பாகிஸ்தானில் இருக்கிறார்.

இவர்களை விசாரணைக்காக இந்தியா அழைத்துவரவோ, அல்லது நாடு கடத்தி இந்தியா கொண்டு வரவோ இந்த வழக்குகளை விசாரணை செய்த சி.பி.ஐ., உள்ளிட்ட தேசிய புலனாய்வு அமைப்பு, போலீசார் என யாரும் மத்திய வௌியுறவுஅமைச்சகத்தை தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுக்கவில்லை. ஆதலால், அவர்களை இந்தியா அழைத்து வர முயற்சிக்க வில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில்தான் தாவுத் இன்னும் இருக்கிறார், கடந்த 10 ஆண்டுகளா அவரை இந்தியா அழைத்து வரமுயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

ப.சிதம்பரம்

அதேபோல, கடந்த 2011ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் கூறுகையில், “கராச்சியில் தாவுத் இப்ராஹிம் இருப்பதாக அறிகிறோம்.மும்பை தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து அரசு முயற்சி எடுக்கும், பாகிஸ்தானில் இருந்து தாவுத்தை அழைத்துவர நடவடிக்கை எடுப்போம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

click me!