மைசூருவின் ஹெப்பலில் உள்ள பட்டாசுக் ஆலையில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்டுள்ள தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் நாசமாகிவிட்டன.
மைசூருவின் ஹெப்பலில் உள்ள பட்டாசுக் ஆலையில் புதன்கிழமை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றிலும் காணப்பட்ட புகைமூட்டத்துடன் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறிய வண்ணம் உள்ளது. மைசூருவின் தொழிற்பேட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்ததாகத் தெரிகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த் தீயணைப்புப் படையினர் விரைந்து அப்பகுதிக்கு வந்து நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் யாரும் சிக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
குத்தகை திட்டம் ஒத்துவராது! சென்னை மெட்ரோவுக்கு 42 ஓட்டுநர் இல்லா ரயில்களை வாங்க முடிவு