வானில் தோன்றிய வெளிச்சப் புள்ளிகள்… என்னவாக இருக்கும்? குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்ந்த மக்கள்!!

By Narendran SFirst Published Sep 13, 2022, 11:49 PM IST
Highlights

உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் நேற்று இரவு வெண்மை நிறப்புள்ளிகள் போன்றதொரு காட்சி வானில் தெரிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் நேற்று இரவு வெண்மை நிறப்புள்ளிகள் போன்றதொரு காட்சி வானில் தெரிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் நேற்று இரவு வெண்மை நிறப்புள்ளிகள் போன்றதொரு காட்சி வானில் தெரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் அது என்ன என்றும் அவர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. இதை அடுத்து மக்கள் பலர் அதனை படமெடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கத்தோடு பகிர்ந்தனர்.

இதையும் படிங்க: பின்புறத்தில் செண்ட் பாட்டிலை சொருகிய நபர்… இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிப்பு… அடுத்து நடந்தது என்ன?

ஒவ்வொருவரின் பதிவிலும் ஒவ்வொரு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. சிலர் அது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க்-51 செயற்கைக்கோள் இணையத் தொகுப்பு என தெரிவித்திருந்தனர். இன்னும் சிலர் இது கடவுளின் செயல் என்று கூறி கிளப்பிவிட்டனர். இன்னும் சிலரோ இது ஏலியனின் பறக்கும் தட்டு என்று பதிவிட்டிருந்தனர். இவர்களுக்கு மத்தியில் ஒருவர் வானில் நகரும் ரயில் பெட்டிகள் என கவிதை வடிவில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: இரண்டாம் கட்ட யூஜிசி - நெட் ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி ?

மேலும் ஒருவர் நாசா, இஸ்ரோ, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுடன் உத்தர பிரதேச அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையையும் டேக் செய்து வானிலை தெரியும் வெண்ணிற புள்ளிகள் பற்றி விவரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதேபோல கடந்த 2021 ஜூன் மாதம் குஜராத்தின் ஜுனாகத், உப்லேட்டா மற்றும் செளராஷ்ட்ராவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படி வானில் விளக்குகள் மின்னும் காட்சியை மக்கள் பார்த்து அதிசயித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!